Prayer to Good St. Anneபுனித அன்னம்மாளிடம் செபம்
புனித அன்னம்மாளிடம் செபம்Prayer to Good St. Anneநல்ல புனித அன்னம்மாளே, கன்னி மரியாவின் தாயே, எங்கள் மீட்பரின் பாட்டியே, நம்பிக்கையோடு உம்மிடம் வருகிறேன். குழந்தையில்லா இல்லத்தின் நீண்ட காத்திருப்பையும், இறைவன் பதிலளித்த மகிழ்ச்சியையும் அறிந்தவரே, என்மேலும் உம்மை நோக்கி மன்றாடும் அனைவர் மேலும் கனிவோடு கண்ணோக்கும்.
என் தேவைகளை உமது தாய்மை இதயத்தில் ஏற்று, உம் மகள் மரியா வழியாக இயேசுவிடம் சமர்ப்பியும். இறைவனின் மகிமைக்கும் என் ஆன்ம நலனுக்கும் உகந்ததாயின், இப்போது நான் கேட்கும் வரத்தை (உங்கள் விண்ணப்பத்தைக் குறிப்பிடவும்) எனக்குப் பெற்றுத்தாரும்.
நீர் மரியாவுக்குக் கற்பித்தது போல, இறைவார்த்தையை அன்புசெய்யவும், அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ளவும், என் வாழ்நாளெல்லாம் அவர் வழியில் பிரமாணிக்கமாய் நடக்கவும் எனக்குக் கற்பித்தருளும். ஆமென்.
Good St. Anne, mother of the Virgin Mary and grandmother of our Saviour, I come to you with confidence. You who knew the long wait of a childless home, and the joy of God's answer, look kindly on me and on all who call upon you.
Take my needs into your motherly heart and present them to Jesus through your daughter Mary. Obtain for me the grace I now ask (mention your request), if it be for the glory of God and the good of my soul.
Teach me, as you taught Mary, to love the word of God, to trust in his promises, and to walk faithfully in his ways all the days of my life. Amen.